மகிழ்ச்சி, அமைதி, அன்பு மற்றும் ஞானம் ஆகியவையே நமது வாழ்க்கையின் இலட்சியங்களாகும். நாம் முழுமையடைய வேண்டும் என்னும் அவா இறைவனின் பிரதியான நமது சுயத்தில் இருந்து எழுகின்றது. இது மனிதர்களின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.जीवन का लक्ष्य है सुख्, शांति, प्रेम और ज्ञान प्राप्ति | ईश्वर समस्त मानवता के माध्यम से ही स्वयं को अभिव्यक्त करता है | पूर्णता की कामना जीवात्मा में उसीमें अवस्थित इश्वर के प्रतिरूप से आती है |
பாபாஜியின் கிரியா யோகமானது கடவுள் எனும் மெய்யறிவுடன் ஒருமித்து ஆன்மானுபவம் பெறுவதற்கான ஒரு விஞ்ஞானபூர்வமான கலையாகும். பண்டைய பதினெண் சித்தர் மரபில் கற்பிக்கப்பட்ட யோக முறைகளைத் தொகுத்து அவற்றிலிருந்து கிரியா யோகத்திற்கு உயிரூட்டினார் இந்தியாவின் மாபெரும் சித்தர்களில் ஒருவரான மஹாவதார் பாபாஜி. கிரியா யோகமானது ‘கிரியாக்கள்’ எனப்படும் பல்வேறு பயிற்சிகளை 5 கிளைகளாகப் பிரித்து உட்கொண்டுள்ளது. கிரியா குண்டலிணி பிராணாயாமப் பயிற்சியின் மூலம் மனிதர்களுக்குள் இறையுணர்வானது நிலைபெறுவது இயற்கையாகவே துரிதமடைகின்றது என்று பரமஹம்ச யோகானந்தர் குறிப்பிடுகிறார்.
கிரியா யோகம்: பாதையில் புலப்பட்டவை
மார்ஷல் கோவிந்தன், ஜேன் துர்கா அஹ்லுண்ட்
எதற்காக கிரியா யோகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றில் உள்ள கஷ்டங்கள் எவை, அவற்றை எவ்வாறு கடப்பது என்பது போன்ற விஷயங்களை இந்த யோகப்பாதையில் பயணிப்பவர்களுக்கும் அவற்றில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும் விளக்கும் ஒரு புத்தகம் தேவை என்று பலவருடங்களாக எனது மனைவி ஜேன் துர்கா அஹ்லுன்ட்டும் நானும் உணர்ந்திருந்தோம். கிரியா யோகத்தில் உள்ள சவால்களையும் வாய்ப்புக்களையும் சந்திக்க இப்புத்தகம் ஒவ்வோருவருக்கும் உதவும் என்று நம்புகிறோம். நமது இயற்கைத்தன்மை தோற்றுவிக்கும் தடைகளை, நமது உண்மையான அடையாளம் என்ன என்பதை அறியாமையை, நமது கர்மா, நமது பழக்கங்கள் சொற்கள் செயல்கள் ஆகியவை தோற்றுவிக்கும் நடத்தைகளை நாம் ஒவ்வோருவரும் சந்திக்கிறோம். இறைவனைக் குறித்த விருப்பத்தை ஏற்படுத்திக்கொள்வது, அகங்காரத்தையும் அதன் மாறுபாடுகளையும் ஒழிப்பது, நமது உயர் இருப்பிடம் சரணடைவது, தூய சாட்சிநிலையில் இருப்பது ஆகியவற்றை வளர்த்துக்கொள்வதன் மூலம் நமது பாதையில் உள்ள எண்ணற்ற தடைகளையும் நமது கர்மத்தையும் வெல்லலாம். ஆனால் அவ்வாறு செய்வதற்கு நமக்கு வழியில் ஒரு தாங்கி, உள்நோக்கு தேவைப்படுகிறது. (184 பக்கங்கள்)
தமிழ் யோக சித்தர் ஓலைச்சுவடிப் பொக்கிஷம்
தமிழ் யோக சித்தர் ஓலைச்சுவடிப் பொக்கிஷம் என்னும் இந்த நூல் இடைச்சங்க காலத்தில் தமிழ் யோக சித்தர்கள் இயற்றிய நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு ஒரு வழிகாட்டியாகும். ஓலைச்சுவடிகளில் காணப்பட்ட இப்பாடல்களை வல்லுனர்களும் அறிஞர்களும் கொண்ட ஒரு குழு சேகரித்து, படியுரு எடுத்துத் தற்காலத் தமிழில் எழுத்துப் பெயர்த்து அதனைத் திருத்தியுள்ளனர். இந்த வழிகாட்டி சித்தர் பாடல்களில் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் யோகம் மற்றும் தந்திரத்தில் விருப்பமுள்ளவர்களுக்கும் ஒரு அரிய பொக்கிஷமாகும்.
1,677 பக்கங்களில் 13,276 பாடல்களைக் கொண்ட குறுந்தகடு இந்நூலின் பின் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளது.
பாபாஜியின் தெய்வீகக் குரல்: கிரியா யோகத்தைப் பற்றிய மூன்று பேருரைகள்
திரு. வி.டி. நீலகண்டன், எஸ்.எ.எ.இராமையா, சத்குரு கிரியா பாபாஜி நாகராஜ்
“பாபாஜியின் தெய்வீகக் குரல், தெய்வீக ரகசியங்களின் வெளிப்பாடு மற்றும் எல்லாத் தொல்லைகளையும் நீக்கும் சிறப்புத் திறவுகோல் என்ற இம்மறுபதிப்பு, நம்மிடையே வாழும் தலைசிறந்த ஆன்மீகக் குருக்களில் ஒருவரது மிக ஆழ்ந்த முக்கியப் பேருரைகளாகும். இதன் ஆசிரியர் சத்குரு கிரியா பாபாஜி நாகராஜ் அவர்கள் இந்நூல்கள் மிகுந்த ஊக்கத்தை அளிப்பனவாகவும் கிரியா யோகத்தின் இலக்கான: வேற்றுமையில் ஒற்றுமை, உலக அமைதி மற்றும் இறைவனை அறிதல் ஆகியவற்றிற்குப் பெரிதும் உதவுவனவாகவும் இருக்கும் என்று முன்னமே கூறியுள்ளார். வாழ்க்கையில் உயர விரும்புபவர்களுக்கு இந்த ரத்தினங்கள் பெரும் ஊக்கத்தை அளிக்கும்
பாபாஜியும் 18 சித்தர்களின் கிரியாயோக சம்பிரதாயமும
எம். கோவிந்தன்
பரமஹம்ச யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதை என்ற அழியாப்புகழ் பெற்ற நூலின் மூலம் உலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பாபாஜியின் வாழ்க்கை வரலாறு. பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன் முக்திநிலையையும் தெய்வீக மாற்றத்தையும் அடைந்த பாபாஜி, இன்றும் பத்ரிநாத் அருகில் பதினாறு வயது இளைஞராக வாழ்கிறார். தமிழகத்தில் புகழ்பெற்ற பதினெட்டு சித்தர்கள் பரம்பரையைச் சார்ந்த அகத்தியரும் போகநாதரும் அவருக்கு கிரியா யோக தீட்சை அளித்தனர். நீண்ட காலமாக அவரது சிஷ்யராக இருக்கும் ஒருவர் இந்த அரிய நூலின் மூலம் இதுவரை வெளிவராத சில புதிய தகவல்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் பழங்கால பழக்கவழக்கங்கள் மற்றும் தற்கால இலக்குகளையும், கிரியா யோகா எவ்வாறு உலக வாழ்க்கையையும் ஆன்மீகத் தேடலையும் ஒன்று சேர்க்கிறது என்பதையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
செய்தி
எமது அறக்கட்டளையானது ருத்ரப்ரயாக் அருகில் நிர்மானித்துக்கொண்டிருக்கும் பாடசாலை..
மனிதனுக்கும் இறைவனின் விந்தைகளுக்கும் இடையேயான முதல் சந்திப்பு மௌனத்தின் மூலமே ஏற்படுகிறது. மௌனத்தின் அமுதத்தை ருசியுங்கள்.